கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் விநியோக்கிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களைத் தொடர்ந்து எல்லையோர தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி, க்யூ பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் மாவோயிஸ்ட் குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கையை கேரள மாநிலம் திருநல்லி பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை விநியோகித்துள்ளனர்.
அப்பகுதியில் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிய மாவோயிஸ்டுகள், காவல் துறையினர் வரும்முன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதைத் தொடர்ந்தே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக க்யூ பிரிவு காவல் துறை அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.