இயற்கையின் கோர பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தி.வேல்முருகன்
பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சுற்றிப்பார்த்து பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சுற்றிப்பார்த்து பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
கடலூர் மாவட்டம் காட்டாற்று வெள்ளத்தால் பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட விசூர் பஞ்சாயத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரட் வீடு கட்டித்தர வேண்டும். தற்போது ஒதுக்கி ரூ.500 கோடி போதாது. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடலூர் பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டமாகக் கருதி இயற்கையின் கோர பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் சேதமடைந்த விவசாய நிலத்திற்கு முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து ஏரி, காய்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். விசூர் ஊராட்சிக்குத் தனி கவனம் செலுத்தி நிவாரண பணிகளை செய்யவேண்டும். அப்பகுதியில் டேம் ஒன்று அமைக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பாதிப்படைந்த பகுதிகளைப் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, உரிய நிவாரணம் பெற்று தருவேன் என அவர் கூறியுள்ளார்.