முகப்பு
தமிழ்நாடு

மாஹே பாரம்பரிய நுழைவு வாயில்: அமைச்சர் ராஜவேலு திறந்தார்

புதுவையின் பிராந்தியமான மாஹேயில் புதிதாக கட்டப்பட்ட பாரம்பரிய நுழைவு வாயிலை சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

புதுவையின் பிராந்தியமான மாஹேயில் புதிதாக கட்டப்பட்ட பாரம்பரிய நுழைவு வாயிலை சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

இரண்டு நாள்கள் பயணமாக மாஹே வந்த அமைச்சர் ராஜவேலு ரூ.1.83 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாரம்பரிய நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு தலா ரூ. 1000 வீதம் வெகுமதி கூப்பன்களையும் அமைச்சர்  ராஜவேலு வழங்கினார்.

மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் சார்பில் முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகையாக ரூ. 1500 வீதம் 47 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாஹே தொகுதி எம்.எல்.ஏ.வும்,  முன்னாள் அமைச்சருமான இ. வல்சராஜ் முன்னிலை வகித்தார். அரசு சிறப்புச் செயலர் டி. கரிகாலன், சுற்றுலாத்துறை இயக்குநர் முனிசாமி மற்றும் மாஹே மண்டல அதிகாரி மங்கலத் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.