கடலூர்: காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்குட்ட பகுதியில் பெய்த கனமழையில் கட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்குட்ட பகுதியில் பெய்த கனமழையில் கட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 9-ம் தேதி நெய்வேலி பகுதியில் கனமழையின் காரணமாக பண்ருட்டி ஒன்றிய பகுதியில் பெரும்பாலான இடத்தில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதில் பெரியகாட்டுப் பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். 9 பேரின் உடல் கண்டெக்கப்பட்ட நிலையில் செல்வி என்பவரின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது.
இவரது உடல் செல்வி (35) சிவசங்கரன் மனைவி. இவரது உடல் அதே பகுதியில் உள்ள ஓடை அருகே மணலில் புதையுண்ட நிலையில் கால் மட்டும் வெளியே தெரிந்தது.
இதையடுத்து, உறவினர்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செல்வியின் உடல் என்று தெரிய வந்தது
பிரேதத்தை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.