சங்கரன்கோவில் 139, கடம்பூர் 137 மி.மீ மழை: அடவிநயினார் அணை நீர்மட்டம் 2 அடி உயர்வு
தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 139 மி.மீ, கடம்பூரில் 137 மி.மீ, ராதாபுரம், வீரகேரளம்புதூரில் 104 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 139 மி.மீ, கடம்பூரில் 137 மி.மீ, ராதாபுரம், வீரகேரளம்புதூரில் 104 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பருவ மழை சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் புதன்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்த போதிலும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): சங்கரன்கோவில் 139, ராதாபுரம் 104, வீரகேரளம்புதூர் 104, பாளையங்கோட்டை 102, ஆய்க்குடி 100, சிவகிரி 57.2, ஆலங்குளம் 56.4, தென்காசி 56.2, செங்கோட்டை 43, திருநெல்வேலி 40, மூலக்கரைப்பட்டி 47, களக்காடு 28.2, நான்குனேரி 14, அம்பாசமுத்திரம் 4.2, சேரன்மகாதேவி 10, கன்னடியன் அணைக்கட்டு 12.6. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 137 மி.மீ மழை பெய்துள்ளது.
பாபநாசம் அணை 20, பாபநாசம் கீழ் அணை 13, சேர்வலாறு அணை 7, மணிமுத்தாறு அணை 3.8, ராமநதி அணை 54, கருப்பாநதி அணை 77, குண்டாறு அணை 42.2, அடவிநயினார் அணை 70, நம்பியாறு அணை 29.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1100 கனஅடியும் சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 800 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 212 கனஅடியும், கடனாநதி அணைக்கு 40 கனஅடியும், ராமநதி அணைக்கு 60 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு 64 தனஅடியும், அடவிநயினார் அணைக்கு 90 கனஅடியும், வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளுக்கு தலா 35 கனஅடியும், நம்பியாறு அணைக்கு 87 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105.85 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 119.09 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77.40 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.30 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 82.00 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 35.25 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 45 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.11 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 127.50 அடியாகவும் இருந்தது.
வியாழக்கிழமை மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்தது. எனவே அணைகளின் நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.