முகப்பு
தமிழ்நாடு

பிற்பட்டோர், சிறுபான்மையினர் துறைக்கு அடுத்த ஆண்டு கூடுதல் நிதி அமைச்சர் பி.ஆர்.சிவா தகவல்

பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு அடுத்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் பி.ஆர்.சிவா தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு அடுத்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் பி.ஆர்.சிவா தெரிவித்துள்ளார்.

பிற்பட்டோர் நலத்துறை சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வார விழா சாரத்தில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

துறை செயலாளர் பி.ஆர்.பாபு தலைமை தாங்கினார். இயக்குநர் எஸ்.மீனாகுமாரி வரவேற்றார். பிற்பட்டோர் மேம்பாட்டுக்கழகத் தலைவர் வை.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

75 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் சிவா பேசியதாவது:

என்.ஆர். காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர். இதற்கு முதல்வர் ரங்கசாமி ஆட்சியே காரணமாகும்.

பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இதனால் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும் என்றார் சிவா. உதவி இயக்குநர் சுகந்தி, அருள்தந்தை லாரன்ஸ், ஹாஜியார் முகமது சையத் பாகவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.