முகப்பு
தமிழ்நாடு

கார்த்திகை மகா தீபத் திருவிழா: ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை, ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:38 AM
பகிர்:

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை, ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.

தீபத் திருவிழாவைக் காண வெளிநாடுகள், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். இதனால், கடந்த சில ஆண்டுகளாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை காவல்துறை கண்காணித்து வருகிறது.

அதன்படி, புதன்கிழமை (நவம்பர் 25) பிற்பகல் முதல் ஆளில்லா குட்டி விமானம் மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு மேலேயும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் குட்டி விமானத்தை பறக்கவிட்டு நகரில் நிலவிய கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் கண்காணித்தனர். இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் காவல்துறை அதிகாரிகள் நகரில் நிலவிய போக்குவரத்து, கூட்ட நெரிசலைக் கண்காணித்து அங்கிருந்த போலீஸாருக்கு அறிவுரைகள் வழங்கியபடியே இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.