முகப்பு
தமிழ்நாடு

ஜிப்மர் மருத்துவமனையில் ஆன்லைன் முன்பதிவு முறை தொடக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஆன்லைன் முன்பதிவு முறையை இயக்குநர் டாக்டர் எஸ்.சி. பரிஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:52 AM
பகிர்:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஆன்லைன் முன்பதிவு முறையை இயக்குநர் டாக்டர் எஸ்.சி. பரிஜா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஜிப்மரில் நாள்தோறும் 8000 புறநோயாளிகள் சிகிச்சை பெற புதிதாக பதிவு செய்கின்றனர். இதனால் காலையில் வரிசையில் நின்று பதிவு செய்து பின்னர் மருத்துவரை ஆலோசிக்க நீண்ட நேரம் செலவாகிறது.

அதனால் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கிருந்தும் நோயாளிகள் மருத்துவமனை இயங்கும் நாட்களில் விருப்பப்படி முன்பதிவு செய்து சிகிச்சை பெறலாம். ஜிப்மர் இணையதள முகவரி www.jipmer.edu.in சிறப்பு வசதி வெள்ளிக்கிழமை முதல் செயல்படும்.

ஆன்லைன் முன்பதிவு முறையை இயக்குநர் டாக்டர் எஸ்சி. பரிஜா தொடங்கி வைத்தார். கண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.