விராலிமலையில் குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு பெண் தற்கொலை
விராலிமலை சக்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன்(40) பழயை இரும்பு வியாபாரி, இவரது மனைவி ராஜலட்சுமி(33) இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண், 1பெண் பிள்ளைகள் உள்ளனர்.
விராலிமலை சக்தி நகரைச் சேர்ந்தவர் கண்ணன்(40) பழயை இரும்பு வியாபாரி, இவரது மனைவி ராஜலட்சுமி(33) இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண், 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டு வேலைகளை சரிவர செய்வில்லை என்று கண்ணன் ராஜலட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜலட்சுமி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத போது சேலை மூலம் வீட்டு உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த விராலிமலை காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.