முகப்பு
தமிழ்நாடு

விராலிமலை அருகே அனுமதியின்றி மதுவிற்ற இருவர் கைது

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம்( டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதிகளில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணி குருஸ் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அம்பாள் நகரில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த அடைக்கன் மகன் சின்னையா(40) சுப்பிமணி(52) ஆகிய இருவரையும் கைது செய்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.