முகப்பு
தமிழ்நாடு

விராலிமலையில் காசு வைத்து சூதாடிய 3 பேர் கைது

விராலிமலையில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:

விராலிமலையில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார்  கைது செய்தனர்.

விராலிமலை-மதுரை சாலை எரிபொருள் விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) அருகே உள்ள பகுதியில் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணிகுருஸ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த விராலிமலை தெற்குத்தெருவைச் சேர்ந்த ப. சேகர்(40) எம். சிங்காரவேலன்(40) பி. விஜயகுமார்(37) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.