முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அன்றாட பணிகள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில்  ஈடுபட்டதை தொடர்ந்து அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமகக்ளுக்கான அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

Updated On : 2 செப்டம்பர், 2015 at 7:58 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:06 PM

விருதுநகர் மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில்  ஈடுபட்டதை தொடர்ந்து அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமகக்ளுக்கான அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வணிகவரித்துறை, நகராட்சி, பேரூராட்சி, சுகாதாரத்துறை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 6560 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 79 சதவீதம் பேர் வேலை நிறுத்தப்போராட்த்தில் ஈடுபட்டனர். இதில், 21 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.

இதனால் வருவாய் துறை மூலம் உதவித் தொகை மனுக்கள், வருவாய் சான்றிதழ் மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பசுமை குடியிருப்பு திட்டங்களில் காசோலை வழங்குதல் மற்றும் கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளுக்கான மேற்பார்வை செய்தல் ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டன. இப்போராட்டத்தினால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் அறை வளாகங்கள் அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.