முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோமாரி தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 2 செப்டம்பர், 2015 at 8:37 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:06 PM

விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடும் முகாம் நடந்து வருகிறது. அதில், விருதுநகர் அருகே இனாம்ரெட்டிபட்டி, பட்டம்புதூர் ஆகிய கிரமங்களில் நடந்த முகாமை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அனைத்து கிராமங்களிலும் விலையில்லா கோமாரி தடுப்பூசி போடும் பணி கடந்த 2011ல் தொடங்கி, இதுவரையில் 8 சுற்றுக்களில் ரூ.17.92 லட்சம் டோசஸ் தடுப்பூசி கால்நடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, 9-வது சுற்று தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ம் தேதி முதல், தொடர்ந்து 21-ம் வரையில் நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் 2.24 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக 2.25 லட்சம் லட்சம் டோசஸ் மருந்துகளும் பெறப்பட்டுள்ளது.

Advertisement

எனவே மாவட்டம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 44 குழுக்கள் அமைத்து நாள்தோறும், 10 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயித்து பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பொதுமக்கள் தங்களது கால்நடைகள், 4 மாத்திற்கு மேலான கன்றுகள் ஆகியவைகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருந்து அளித்து பாதுகாக்க வேண்டும். மேலும், கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயனடையும்மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.