தமிழ்நாடு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பதற்றம்: இருதரப்பினருக்கிடையே மோதலில் இருசக்கர வாகனத்துக்கு தீ வைப்பு

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏறத்தாழ 280 விசைப்படகுகள் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏறத்தாழ 280 விசைப்படகுகள் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் விசைப்படகுகள் 8 சதவீதம் கமிஷன் தரவேண்டும் என வட்டகாரர்கள் தெரிவித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி விசைப்படகுகள் கடந்த 31 ஆம் தேதி வேலைநிறுத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் ஒருதரப்பு மீன்பிடி தொழிலாளர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாம் எனவும் மற்றோரு தரப்பினார் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது எனவும் தெரிவித்தனராம்.

இதற்கிடையே, புதன்கிழமை காலையில் 50-க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுயுள்ளனர். அப்போது விசைப்படகு துறைமுகத்தில் இருந்து வெளியில் சென்ற விசைப்படகுகள் மீது சிலர் கற்கள் மற்றும் இரும்பு குண்டுகள் கொண்டு தாக்கியுள்ளனர் இதில் விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளது.

மேலும் அந்த படகில் இருந்த 3பேர் காயம் அடைந்துள்ளனார் இதை தொடர்ந்து படகுகள் கடலுக்கு செல்லாமல் மீண்டும் விசைப்படகு துறைமுகத்திற்கு வந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.  இந்த நிலையில் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்திற்கு சிலர் வைத்து தீவைத்தனர். 

இதில் தீ மளமள என பரவி இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்தது இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது இந்த நிலையில் விசைப்படகுகள் மீது தாக்குதல் நடத்திவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனார் இந்த சம்பவம் மீன்பிடித்துறைமுகத்தில் பதட்டதை ஏற்படுத்தியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT