முகப்பு
தமிழ்நாடு

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இளைஞர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இளைஞர் விருது பெற தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவித்தது.

Updated On : 5 செப்டம்பர், 2015 at 3:33 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:07 PM

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு இளைஞர் விருது பெற தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவித்தது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் (பொறுப்பு) முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-12 சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணிகளை அங்கிகரிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்கி வருகிறது.

இவ்விருதுக்கு 15 முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இளைஞர்(தனிநபர்) தாங்கள் செய்த சமுதாயப் பணிகளை தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாரம் பெறப்படாமல் செய்திருக்க வேண்டும். இதற்கு முன்பு இவ்விருது பெற்றவர்கள், மத்திய மாநில பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். ஆதாரங்களை புகைப்பட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

அதேபோல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். நிர்வாக அதிகாரிகங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். லாப நோக்கத்துடன் பணியாற்றிருக்க கூடாது. குறிப்பிட்ட சாதி அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டாம். தொண்டு பற்றிய செய்தி மற்றும் புகைப்படம் ஆகியவை இணைத்தனுப்ப வேண்டும். 

இதில் தேர்வு செய்யப்படும் 25 இளைஞர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் ரொக்கம்    பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியது. அதேபோல், தேசிய அளவில்  தேர்வு செய்யப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது. அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் இனையதளம் www.sdat.tn.govt.in முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் செப்.5 ம் தேதி மாலைக்குள் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் வந்து கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.