துலுக்கப்பட்டி பகுதியில் 16-ம் தேதி மின்தடை
விருதுநகர் மின் கோட்டத்தைச் சேர்ந்த துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 16-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் குறிப்பிட்ட கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து செயற்பொறியாளர் தி.திருப்பதி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிபட்டி, மேலச்சின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம் மற்றும் ஒண்டிப்புலிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து பிற்கபல் 2 மணி வரையில் மின்தடை செய்யப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement