முகப்பு
தமிழ்நாடு

விருதுநகரில் வாகன விபத்தில் கொத்தனார் சாவு

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On : 12 செப்டம்பர், 2015 at 5:44 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:11 PM

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே புல்லலக்கோட்டையைச் சேர்ந்த கணேசனின் மகன் முருகன்(24). இவர் கொத்தனராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு விருதுநகருக்குள் வந்து விட்டு திரும்ப புல்லலக்கோட்டை சாலைக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கடந்தாராம். அப்போது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும்  பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து கணேசன் விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.