முகப்பு
தமிழ்நாடு

கலசலிங்கம் பல்கலை.யில் வளாக நேர்காணல்: 36 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நிறுவனங்கள் செவ்வாய்கிழமை நடத்திய வளாக நேர்காணலில் 35 பேர் பணி நியமனம் பெற்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இரு நிறுவனங்கள் செவ்வாய்கிழமை நடத்திய வளாக நேர்காணலில் 35 பேர் பணி நியமனம் பெற்றனர்.

சென்னை ஜிபோ டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.கமலகாசன் நடத்திய வளாக நேர்காணலில் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு பயோடெக்னாலஜி படிக்கும் 16 மாணவ மாணவியரும், கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் 44 பேரும் கலந்து கொண்டனர். இவர்களில் கலசலிங்கம் பல்கலைக்கழத்தின் மாணவி சி.ரம்யா, வெற்றி பெற்று பணி நியமன உத்தரவு பெற்றார்.

சென்னை ஆர்.சி.எம். நிறுவனத்தின் தலைமை அதிகாரி கண்ணப்பன் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் வளாக நேர்காணலை நடத்தினர். இதில் பல்கலைக்கழத்தில் பயோ டெக்னாலஜி இறுதியாண்டு படிக்கும் 39 பேர் கலந்து கொண்டனர். இவர்களின் 35 பேர் பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று, நேர்காணலிலும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.

பணி நியமனம் பெற்ற மாணவ மாணவியரை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அலாவுதீன் செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →