கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தில் 3 பேர் கைது: கார் பைக் பறிமுதல்
கம்பத்திலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்திய 3 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.
கம்பத்திலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்திய 3 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று இரவு கைது செய்தனர்.
உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் கம்பம்-கம்பமெட்டு சாலையில் மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கம்பத்திலிருந்து வந்த காரினை மறித்து சோதனை செய்தபோது, காரில் 350 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரனையில் கம்பமெட்டு காலனியைச் சேர்ந்த அக்பர் அலி(26), விஜயக்குமார்(22) என்று தெரியவந்தது.
பிடிபட்டவர்களிடம் விசாரனை நடத்திக்கொண்டிருக்கும்போதே, பைக்கில் வந்த இளைஞரை மறித்தபோது, அவர் பைக்கில் 100 கிலோ ரேசன் அரிசி மூட்டை வைத்திருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த பாண்டி(22) என்று தெரியவந்தது. பிடிபட்ட 3 பேரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக்கும் பறிமுதல் செய்தனர்.