முகப்பு
தமிழ்நாடு

ஆண்டாள் கோவிலில் நடிகர் விஜய் சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு இன்று வந்து திரைப்பட நடிகர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழ்நாடு

ஆண்டாள் கோவிலில் நடிகர் விஜய் சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு இன்று வந்து திரைப்பட நடிகர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு இன்று வந்து திரைப்பட நடிகர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.

திரைப்பட நடிகர் விஜய், அவரது கார் ஓட்டுநர் மற்றும் ஒருவருடன் திடீரென ஆண்டாள் கோவிலுக்கு யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத அளவில் சாதாரணமாக வந்து சுவாமி தரிசனம் செய்தார். குல்லா மற்றும் மூக்கு மற்றும் வாய்யுடன் சேர்த்து ஒரு மாஸ்க் கட்டிக் கொண்டு வந்த அவர் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தார். தனது பெற்றோர் மற்றும் தனது பெயருக்கு அர்ச்சனை செய்தார். சுமார் 10 நிமிடம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், காரில் ஏறியவுடன் தனது குல்லா மற்றும் மாஸ்க்கை கழற்றினார். இதனையடுத்து அவருடன் சென்ற கோவில் பணியாளர் கர்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு காரில் விரைந்து சென்றுவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →