தமிழ்நாடு

சென்னையிலோ கடும் வெயில்: தூத்துக்குடி, தேனியில் மழை

சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில், தூத்துக்குடியில் நேற்று மழை பெய்துள்ளது.

PTI

சென்னை :  சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில், தூத்துக்குடியில் நேற்று மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதன்கிழமை சுமார் 45 நிமிடங்கள் இடி, மின்னலுடன் கூடிய மழை  பெய்தது.

கழுகுமலையில் சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 6 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணிக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இம் மழை சுமார் 45 நிமிடம் நீடித்தது.

இதே போல, உதகமண்டலம், தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பதிவாகியுள்ளது.

இதே போல, குமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஆனைக்கிடங்கில் 111 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT