விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்புமனு தாக்கல்
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
விராலிமலை: விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே. 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30 தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இந்நிலையில்,வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த 3 நாள்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இந்த நிலையில் (திங்கள்கிழமை) 25-ம் தேதி திமுக வேட்பாளர் எம். பழனியப்பன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் இலுப்பூர் சிவன் கோயிலில் தரிசனம் செய்தார் பின்னர் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று இலுப்பூர் கோட்டாட்சியரும், விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆர். டெய்ஸிகுமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் த. சந்திரசேகர், ஒன்றியச் செயலாளர் அ. இளங்குமரன்(விராலிமலை மேற்கு)ஆர். எஸ். மாரிமுத்து(அன்னவாசல் வடக்கு) கே. எஸ். சந்திரன்(தெற்கு) நகரச் செயலர் வி. கிஜயகுமார்(இலுப்பூர்) க. சண்முகசுந்தரம்(விராலிமலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.