தமிழ்நாடு

காலமானார் பாவலர் மணிவேலன்

அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த பாவலர் மணிவேலன் (84) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (ஏப்.28) காலமானார்.

தினமணி

அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த பாவலர் மணிவேலன் (84) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை (ஏப்.28) காலமானார்.
 இவர் பீலிவளை எனும் வரலாற்றுக் காப்பியத்தின் ஆசிரியராவார். மழலை இன்பம், மழலை இலக்கியம், காதைத் திருப்பு கதை சொல்கிறேன், இயற்கை அழைக்கிறது வா உள்ளிட்ட 15 நூல்களை எழுதியுள்ளார்.
 2000-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
 இவர் எழுதிய சுவை நோக்கில் சுரதா, நாகநாட்டு இளவரசி, பீலிவளை ஆகிய நூல்களுக்கு தமிழக அரசு பரிசு வழங்கியுள்ளது. இவருக்கு மனைவி ராசம், மகன் குறிஞ்சி சீத்தாராமன், மகள்கள் கலைச்செல்வி, பல் மருத்துவர் தில்லைக்கரசி ஆகியோர் உள்ளனர்.
 இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: 99444 30472.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸாவில் போர்நிறுத்தம்! இஸ்ரேல் முதற்கட்ட நடவடிக்கை!

கரூர் பலி: சிறப்புக் குழு விசாரணை தொடக்கம்!

விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!

SCROLL FOR NEXT