தமிழ்நாடு

5 நிமிடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் வாய்ப்பை இழந்த தங்கராசு

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தமாகா வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் மனுத்தாக்கல் செய்தார்.

முத்துக்குமார்

கடலூர்:  கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தமாகா வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் மனுத்தாக்கல் செய்தார்.

அதன்பின்னர் 3 மணி வரையில் யாரும் வராத நிலையில், மனுத்தாக்கல் முடிந்தது என்று அலுவலக வாசலில் நின்றுக் கொண்டிருந்த போலீஸார் நினைத்திருந்தனர்.

அப்போது திடீரென ஒருவர் அலுவலகம் உள்ளே நுழைந்தார் தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். நேரம் முடிந்து விட்டதாக போலீஸார் கூறியும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திப்பதாக கூறி உள்ளேச் சென்றார். கோட்டாட்சியரான தேர்தல் நடத்தும் அலுவலர் நா.உமாமகேஸ்வரியை சந்தித்து வேட்புமனுத்தாக்கலுக்கான ஆவணங்களை வழங்கினார். ஆனால் மணி 3.05 ஆகியிருந்ததால் மனுவை வாங்க முடியாதென கோட்டாட்சியர் திருப்பியனுப்பினார்.

இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கப்பியாம்புலியூரைச் சேர்ந்த கு.தங்கராசு(59) என்பது தெரிய வந்தது. சுயேட்சையாக போட்டியிட விரும்பிய இவர், மனுத்தாக்கலுக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றுச் சென்றுள்ளார். விண்ணப்பத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான சான்றினை பெற்று வருவதற்காக மீண்டும் விழுப்புரம் சென்று வர நேரமாகி விட்டதாக கூறினார்.

5 நிமிடத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு தவற விட்ட சோகத்தில் திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

உயரும் யமுனை நீா் மட்டம்: கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-வது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

SCROLL FOR NEXT