கடலூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
கடலூர் மாவட்டம் அண்ணா கிரமம் ஊராட்சி ஒன்றிருப்பு கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் கூட்டம் நடைபெறமால் தடைப்பட்டது.
பண்ருட்டி: கடலூர் மாவட்டம் அண்ணா கிரமம் ஊராட்சி ஒன்றிருப்பு கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் கூட்டம் நடைபெறமால் தடைப்பட்டது.
இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் சதிஸ்குமாரிடம் ஒன்றியக்குழு பெருதலைவர் சுந்தரி முருகன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்.
கடலூர் மாவட்டத்தில் அண்ணா கிராமம் ஒன்றியம் செயல்பட்டு வருகின்றது. இதில் உள்ள 42 பஞ்சாயத்துக்கள் 42 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள். அடிப்படை பணிகளை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஓராண்டு காலமாக எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லையாம். கடந்த முறை நடந்த கூட்டத்தின் போது ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என அதிகாரிகள் உறுதியளித்தனராம்.
இந்நிலையில், ஓரிரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காகன அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில் அண்ணாகிரம ஒன்றியத்தின் ஒன்றியக்குழு சாதாரண இறுதிக்கூட்டம் திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நடக்க இருந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு தலா 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வந்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம் எனக் கோரிக்கையை வலியுறுத்திக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இப்பிரச்னை தொடர்பாக வட்டாச்சி அலுவலர் சதிஸ்குமாரிடம் அதிமுக.,வை சேர்ந்த ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுந்தரி முருகன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒன்றியக்குழு துணை தலைவராக அமைச்சர் எம்.சி சம்பத்தின் சகோதரர் எம்.சி சமந்தம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.