தமிழ்நாடு

1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மகாவீரர் சிலை மீட்பு

DIN

ராணிப்பேட்டை அருகே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மகாவீரர் கற்சிலையை கிராம மக்களிடம் இருந்து மீட்ட வருவாய்த் துறையினர் அதனை வேலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் ஊராட்சிக்கு உள்பட்ட அவரக்கரை கிராமத்தில், கடந்த 2008-ஆம் ஆண்டு விவசாய நிலத்தை தோண்டியபோது மண்ணில் புதையுண்டு கிடந்த முதுமக்கள் தாழிகள் மற்றும் பழைமைவாய்ந்த மகாவீரர் கற்சிலை ஆகியவை கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் அவற்றை மீட்க அவரக்கரை கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது முதுமக்கள் பயன்படுத்திய தாழிகளை மட்டும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்த கிராம மக்கள், மகாவீரர் சிலையை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து முதுமக்கள் தாழிகளை வேலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த வருவாய்த் துறையினர், அவரக்கரை கிராம மக்கள் வசம் உள்ள மகாவீரர் கற்சிலை குறித்தும் தகவல் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரக்கரை கிராமத்தில் உள்ள மகாவீரர் சிலையை மீட்க வேலூர் அருங்காட்சியகம் சார்பில், கடந்த 8 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பி மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில், ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பிரியா, மண்டலத் துணை வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோர் ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கிராம உதவியாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அவரக்கரை கிராமத்துக்கு சென்றனர். அங்கு மண்ணில் ஒரு பகுதி புதையுண்ட நிலையில் இருந்த மகாவீரர் கற்சிலையை வெள்ளிக்கிழமை மீட்டனர். மீட்கப்பட்ட சிலையை வேலூர் கோட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அவரக்கரை கிராமத்தில் மீட்கப்பட்ட மகாவீரர் கற்சிலையானது சுமார் 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT