முகப்பு
தமிழ்நாடு

வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் விவேக்

தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

Updated On : 30 டிசம்பர், 2016 at 4:03 PM
பகிர்:


சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார்.

ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், விவேக் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகியுள்ளார் விவேக்.

வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவில் இருந்து விவேக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டியவர், ஒரு வாரம் காலம் தாழ்த்தி இன்று ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.