முகப்பு
தமிழ்நாடு

அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் தகவல்

மாணவர்களின் வசதிக்காக அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியை இரண்டாக பிரித்து, வரும் 2016-2017, ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தனியாக செயல்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமை பள்ளியை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

மாணவர்களின் வசதிக்காக அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியை இரண்டாக பிரித்து, வரும் 2016-2017, ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தனியாக செயல்படுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக சனிக்கிழமை  பள்ளியை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.

விராலிமலையில் செய்தியாளர்களிடம் இத்தகவலை அவர் தெரிவித்தார்.

இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் 741 மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பெண்கள் 398 பேர் உள்ளனர். குறிப்பாக இதில் இஸ்லாமிய மாணவிகள் அதிக அளவில் இருப்பதாலும் அதிலும் பல மாணவிகள் சுமார் 12 கிமீ தொலைவில் இருந்து வந்து, இப்பள்ளியில் கல்வி பயில்வதாகவும், அம்மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இப்பள்ளியை இரண்டாக பிரிக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் சமுக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப், 2- ஆம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளியை 2-ஆக பிரித்து வரும் கல்வி ஆண்டில் மகளிர் உயர்நிலைப்பள்ளி தனியாக செயல்படும் என்று தமிழக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது, இதையடுத்து புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளதாகவும், அதுவரை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியாக மகளிர் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் இயங்கும் என்றார் அமைச்சர்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ. சாந்தி, ஆத்மாகுழுத்தலைவர் பி. சாம்பசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.