தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கிய மகாமகப் பெருவிழாவில் முதல்நாளில் ஏராளமான பொதுமக்கள் நீராடினர்.
வழக்கமாக, 6 சிவக் கோயில்களில் கொடியேற்றியப் பின்னர்தான் பக்தர்களும், பொதுமக்களும் நீராடுவது வழக்கம். ஆனால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டத்தை கணிசமாகக் குறைத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மக்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகாகமப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கி இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி 22-ம் தேதி நடைபெறுகிறது.
மகாமகக் குளத்திலுள்ள காவிரி தீர்த்தம், வாயு தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் என 20 தீர்த்தங்களுக்கும் சென்று பொதுமக்கள் நீராடினர். பொதுமக்கள் வசதிக்காக குவளைகளும், வாளிகளும் விற்பனை செய்யப்பட்டன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடினர்.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக குளத்தின் பல்வேறு இடங்களில் நீர்த் தெளிப்பான்கள் வைக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.