தமிழ்நாடு

கொடியேற்றத்துடன் தொடங்கியது கும்பகோணம் மகாமகம் திருவிழா

குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது.

கு. வைத்திலிங்கம்

குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004ம் அண்டு மகாமக விழா நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது. தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கிய மகாமகப் பெருவிழாவில் முதல்நாளில் ஏராளமான பொதுமக்கள் நீராடினர். வழக்கமாக,  6 சிவக் கோயில்களில் கொடியேற்றியப் பின்னர்தான் பக்தர்களும், பொதுமக்களும் நீராடுவது வழக்கம். ஆனால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டத்தை கணிசமாகக் குறைத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மக்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு  நடைபெறும் மகாகமப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கி இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி 22-ம் தேதி நடைபெறுகிறது.

மகாமகக் குளத்திலுள்ள காவிரி தீர்த்தம், வாயு தீர்த்தம்,ஜடாயு தீர்த்தம் என 20 தீர்த்தங்களுக்கும் சென்று பொதுமக்கள் நீராடினர். பொதுமக்கள் வசதிக்காக குவளைகளும், வாளிகளும் விற்பனை செய்யப்பட்டன.  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடினர்.

பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக குளத்தின் பல்வேறு இடங்களில் நீர்த் தெளிப்பான்கள் வைக்கப்பட்டிருந்தது.

6 மகாமகம் கண்ட பாட்டி: தான் ஏற்கெனவே 6 மகாமகத்தைக் கண்டு புனித நீராடினாலும், 7வது முறையாக தற்போது மகாமகக் குளத்தில் நீராடியது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் கும்பகோணம் டபீர்புதுத் தெருவைச் சேர்ந்த வி. விசாலம் (85).

அப்போதெல்லாம் இதுபோன்ற வசதிகள் கிடையாது, மாட்டு வண்டிக் கட்டிக் கொண்டும், கும்பகோணத்தைச் சுற்றியுள்ளபகுதிகளிலிருந்து நடந்து வந்தே நீராடிச் செல்வார்கள். ஆனால், தற்போதைய மகாமகப் பெருவிழாவுக்காக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிóன்றன.

புண்ணியத் தீர்த்தங்களைக் கொண்ட புன்னியத் தலமான கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகாமகப் பெருவிழாவில் நீராடியது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த குளத்தில் நீராடியவர்கள் பெரும் பலனை அடைவார்கள் என்றார் விசாலம்.

கூட்டம் இல்லாத போதே நீராடுவது மகிழ்ச்சி: தீர்த்தவாரி நடைபெறும் பிப்ரவரி 22-ம் தேதி மகாமகக் குளத்தில் நீராடுவது என்பது இயலாத காரியம். இதனால் மகாமக விழா தொடங்கிய முதல் நாளில் கூட்டம் இல்லாத போதே நீராடவேண்டும் என்று கருதி வந்தோம். 20 தீர்த்தங்களிலும் நீராடி புண்ணியம் பெற்ற என்ற எண்ணத்தோடு செல்கிறோம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நாராயணன்.

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முதல் நாளிலேயே நீராடினோம். நல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று நீராடிய பொதுமக்கள் பலரும் மகிழ்வுடன் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT