முகப்பு
தமிழ்நாடு

பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார் பாமக தலைவர் ராமதாஸ்

பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று ஆஜரானார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:

பண்ருட்டி: பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் ராமதாஸ் இன்று ஆஜரானார்.

2011 சட்டப்பேரவை தேர்தலின் போது பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சபா ராஜேந்திரனை ஆதரித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர். அப்பிரசாரத்தின் போது அனுமதிக்கப்பட்ட இடத்தை  விட்டு வேறு இடத்தில் பிரசாரம் செய்தது காலம் கடந்து பிரசாரம் செய்தது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் பாமக தலைவர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாளவன், சுபவீரப்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நெப்போலியன் உள்ளிட்டோர் மீது தேர்தல் நடத்தை விதி மீறலின் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2-ம் தேதி சுபவீரப்பாண்டியன், தற்போதைய திமுக எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், முன்னாள் கடலுர் நாடளுமன்ற உறுப்பினர் கே.பி அழகிரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்ற நகலை பெற்றுகொண்டனர். அப்போது, வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. செவ்வாக்கிழமையன்று வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்ற நகலை பெற்றுகொண்டார். புதன்கிழமை காலை பாமக தலைவர் ராமதாஸ் பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றவியல் நடுவர் எண் 1 சரவணபாபு முன்னிலையில் ஆஜராகி குற்ற நகலை பெற்றுகொண்டார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது......

13.4.2011 அன்று அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு, வேறு இடத்தில் பேசியதாகவும், பட்டாசு வெடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டம் தன் கடமையை செய்துள்ளது.

நான் சட்டம் ஒழுங்கை மதிப்பவன் என்பதால் இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும், ஒழுக்கம் சட்டத்தை காக்கும் என்று பார்த்து பிரித்துள்ளது. ஆகமொத்தம் சட்ட ஒழுக்கம் சந்தி சிரிக்கின்றது. செவ்வாய்க்கிழமை மட்டும் தமிழகத்தில் 11 கொலைகள் நடந்துள்ளன. சென்னையில், தொழிலதிபர் வீட்டில் 4 கோடி மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளது.

இப்பிரச்னையில் காவல்துறையை குற்றம் சாட்டுவதற்கு இடமில்லை. ஆட்சியாளர்களை தான் குற்றம் சாட்ட வேண்டும். தமிழகத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் தான் உள்ளனர். 20 ஆயிரம் பேர் பயிற்சி முடித்தும் பணி வழங்கப்படாமல் உள்ளனர்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு டம்மி போஸ்ட் வழங்கியுள்ளனர். திறமையான அதிகாரிகளுக்கு நல்ல பதவி இல்லை. இந்நிலையில் மனாமதுரையில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் குற்ற செயல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றது.

இப்படிப்பட்ட நிலையில் தான் மிக மிக முக்கியமான வழக்கு என்பதால் இங்கு நான் வந்துள்ளேன். தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பாடு செய்பவர்கள் வேறு... அந்த இடத்தில் பலர் பேசுகின்றனர். சில சமயங்களில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் பேச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இது விதிமீறல் என்றால் சூழ்நிலை தான் காரணம் என கூறினார்.

இவருடன் முன்னாள் மாவட்ட செயலர் கோ.ஜெகன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடனிருந்தனந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →