முகப்பு
தமிழ்நாடு

ஆதிதிராவிட விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.1.43 கோடி ஒதுக்கீடு

கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.1.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கோ.விஜயா தெரிவித்துள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

நெய்வேலி: கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.1.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கோ.விஜயா தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பிரதம மந்திரி விவசாய பாசன மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் விவசாயிகளின் நலன் கருதி 2014-2015 மற்றும் 2015-2016-ஆம் ஆண்டுகளில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்காக ரூ.1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களான மா, பலா, வாழை, முந்திரி, கொய்யா, மரவள்ளி, மலர்கள் மற்றும் காய்கறி பயிர்களுக்கு நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நுண்ணீர் பாசன கருவி அமைப்பதற்கு இடைவெளி அடிப்படையில் சிறு மற்றும் குறு ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும் இதர ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் பயிர்களின் இடைவெளிக்கு தகுந்தவாறு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிடர் விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் செயல்படும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அலுவலர்கள், உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் மானியம் பெற நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-3, குடும்ப அட்டை நகல்ந ஆகிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →