கொச்சி சேரநல்லூரில் அது ஒரு தரமான ஹோட்டல், கார்ப்பரேட் அதிகாரிகள் பலரும் அடிக்கடி வந்து தங்கிச் செல்லும் அந்த ஹோட்டலில் ஜீக்கோ லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஸ்ரீஜித் வந்து தங்கினார். ஸ்ரீஜித் அங்கிருந்த நாட்களில் சர்வீஸ் பாய் 'திரவியா தொலாக்கியா' எனும் குஜராத்தி இளைஞரின் சேவை ஈடுபாடு மற்றும் அவரது அழகான ஆங்கில உரையாடல்களால் ஈர்க்கப்பட்டு இதைக் காட்டிலும் அதிக வருமானம் தரக் கூடிய ஒரு வேலையை தனது நிறுவனத்தில் வழங்க முன்வந்தார். ஆனால் ஸ்ரீஜித்தின் நண்பர்கள் அவரது நல்லெண்ணத்தை குறைக்கும் வகையில் அயல்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முன் பின் அறிமுகமற்ற நபருக்கு உதவுவது தொல்லையில் முடியலாம் என ஸ்ரீஜித்தை தடுக்க முயன்றனர். நண்பர்களின் மறுப்பைப் புறக்கணித்து ஸ்ரீஜித் அந்த குஜராத்தி இளைஞரிடம் தான் அவருக்குத் தர விரும்பும் நல் வாய்ப்பைப் பற்றி பேசிய போது தான் இந்தக் கதையில் ஒரு ஆச்சர்ய டிவிஸ்ட்!
திரவியா ஹோட்டலில் சாதாரண சர்வீஸ் பாய் அல்ல. அவர் சூரத்தின் பாரம்பரியமிக்க டெக்ஸ்டைல் குடும்பத்தின் கோடீஸ்வர வாரிசு! அவர்களது குடும்பத்தில் இப்படி ஒரு வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறதாம். ஆண்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் குடும்பத் தொழிலில் இறக்குவதற்கு முன் அனுபவப் படிப்பைப் பெறுவதற்காக இப்படி அயல்மாநிலங்களில் ஏதாவது வேலை தேடிக் கொண்டு தங்களது சுய வருமானத்தில் சில காலம் வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் தான் வாழ்வின் கஷ்ட நஷ்டங்கள் அவர்களுக்குத் தெரியவரும் என்பது அவரது குடும்பத்து பெரியவர்களின் பழக்கம். அப்படித் தான் திரவியா கொச்சி ஹோட்டலில் சர்வீஸ் பாய் ஆனார்.
இனி நீங்கள் எப்போதாவது இப்படிப்பட்ட ஹோட்டல்களில் தங்க நேர்ந்தால் உங்களுக்கு சர்வீஸ் செய்யும் நபரை இளப்பமாக எண்ணிவிடாதீர்கள், அவர்களது சேவை பிடித்திருந்தால் பதிலாக அவர்களுக்கு ஒரு மெலிதான புன்னகையைப் பரிசளிக்கலாம். ஏனெனில் அவர் ஒரு கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசாகக் கூட இருக்கலாம் என்பது திடீர் டிவிஸ்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.