முகப்பு
தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரை காப்பாற்றிய அமைச்சர்

விராலிமலை அருகே சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலைவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய லாரி ஒட்டுநருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முதலுதவியளித்து தனது

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

விராலிமலை அருகே சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலைவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய லாரி ஒட்டுநருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முதலுதவியளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது அறந்தாங்கியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(50), லாரி ஒட்டுநரான இவர் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல்லுக்கு பதப்படுத்தப்பட்ட மாட்டு எலும்புகளை ஏற்றி சென்று கொண்டு இருந்தார்.

விராலிமலை அருகே நம்பம்பட்டி பிரிவு சாலையருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.  இந்த நிலையில், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லும் விழாவில் பங்கேற்றுவிட்டு அவ்வழியே சென்று கொண்டிருந்தார்.

இச்சம்பவத்தை கண்டதும் உடனடியாக காரை நிறுத்தி காரில் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு மாரிமுத்துவுக்கு முதலுதவியளித்தார், பின்னர், தனது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் மாரிமுத்துவை ஏற்றி  மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 

அதனைத் தொடர்ந்து மருத்துவர்களை தொடர்பு கொண்ட அமைச்சர் நிலைமையை எடுத்துகூறி மேல்சிகிச்சையளிக்குமாறு ஆலோசனை வழங்கினார். தனது பல்வேறு பணிகளுக்கு இடையில் முகம்சுளிக்காமல் முதலுதவியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கரை அப்பகுதி மக்கள் பாராட்டிச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.