விராலிமலை அருகே அரசு பள்ளி பூட்டை உடைத்து திருட்டு
விராலிமலை அருகே பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் கணினியில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை அழித்தும், பென்ட்டிரைவ் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விராலிமலை: விராலிமலை அருகே பள்ளியின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் கணினியில் பதிவேற்றப்பட்ட ஆவணங்களை அழித்தும், பென்ட்டிரைவ் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது, இப்பள்ளியில் கடந்த 26-ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அள்ளே புகுந்து பீரோவை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளின் வினாத்தாள் கட்டணம் ரூ. 53.610 ரொக்கத்தை திருடியும், அங்கு இருந்த 3 இரும்பு பீரோவை உடைத்தும் சேர்களை சேதப்படுத்தியதோடு கணினியில் பதிவேற்றப்பட்டிருந்த பல்வேறு கோப்புகளை அழித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிதலைமையாசிரியர் கே. எஸ். சந்திரா அளித்த புகாரினைத் தொடர்ந்து இலுப்பூர் போலீஸார் சனிக்கிழமை