தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து பெண் உலக சாதனை

காஞ்சிபுரம், கோயில் நகரம் அருகே பெண் வழக்குரைஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

IANS

சென்னை: காஞ்சிபுரம், கோயில் நகரம் அருகே பெண் வழக்குரைஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

2வது சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. பல்வேறு மாநிலத்தில் யோகா தினத்தை கொண்டாடும் வகையில் யோகா ஆசனத்தை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் வசித்து வருபவர் கே.பி ரஞ்சனா (34). இவர், வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இவர், தொடர்ந்து 53 மணி நேரம் யோகா ஆசானங்களை செய்து அசத்தியுள்ளார்.

நேபாளத்தை சேர்ந்த உத்தம் முக்தன் கடந்த 2015-ல் தொடர்ந்து 50 மணி நேரம் யோகா செய்து அசத்தியுள்ளார். அவரை தொடர்ந்து, ரஞ்சனா ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிட இடைவெளியில் 600 யோகா ஆசானங்களை செய்துள்ளார் என்று மஹாமஹாரிஷி அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ் ரிஷி தெரிவித்துள்ளார்.

ஜூன் 19-ம் தேதி யோகா ஆசனத்தை செய்ய தொடங்கிய ரஞ்சனா, இன்று மதியம் 3 மணியளவில் தன்னுடைய ஆசானத்தை முடித்துள்ளார். தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ரஞ்சனா உணவாக வெறும் பழ ரசத்தையை எடுத்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT