முகப்பு
தமிழ்நாடு

நடைபயிற்சி சென்ற என்எல்சி ஊழியர் மண்வெட்டியால் அடித்துக் கொலை: இளைஞர் கைது

நெய்வேலி அருகே நடைபெயற்சி சென்ற என்எல்சி ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

பண்ருட்டி: நெய்வேலி அருகே நடைபயற்சி சென்ற என்எல்சி ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி வட்டம் 2 துங்கபத்ரா சாலையில் வசித்து வந்தவர் அண்ணாலை (44), இவர், என்எல்சி சுரங்கம் 1A-வில் சீனியர் டெக்னீஷியன் ஆக பணியாற்றி வருகின்றார். காலை 8.20 மணியளவில் நடைபயிற்சி சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த மரியபிரகாசம் மகன் ஹோலிகா (34) என்பவர் முத்துலிங்கம் என்னும் முதியவரை தாக்கிக் கொண்டிருந்தார். இதனை தடுத்துள்ளார் அண்ணாமலை. அப்போது ஆத்திரம் அடைந்த ஹோலிகா அருகில் உள்ள மண்வெட்டியை கொண்டு தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

அதில், அண்ணாமலை மயங்கி கீழே விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர் மீட்டு என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நெய்வேலி நகர போலீசார் ஹோலிகாவை கைது செய்து விசாரரித்து வருகின்றனர். இறந்த அண்ணாமலைக்கு உமாதேவி (40) என்ற மனைவியும், வினோத் (22) சுரேந்திரா (19) ஆகிய மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →