தமிழ்நாடு

பக்தி மார்கத்தில் பயணிக்கும் ராஜீவ் குற்றவாளிகள் முருகன், சாந்தன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரில், ஸ்ரீஹரன் என்கிற முருகனும், சாந்தனும், தங்களது கவனத்தை இறை வழிபாட்டில் செலுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

PTI

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரில், ஸ்ரீஹரன் என்கிற முருகனும், சாந்தனும், தங்களது கவனத்தை இறை வழிபாட்டில் செலுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரும், விடுதலையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், 7 பேரில் முருகனும், சாந்தனும் சிறை வளாகத்துக்குள் இருக்கும் கோயிலுக்கு தினந்தோறும் வருவதும், பூஜைகளில் பங்கேற்பதுமாக உள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் கோயிலுக்கு தொடர்ந்து வருவதாகவும், குறிப்பிட்ட நேரங்களில் நடக்கும் பூஜைகளுக்கு தவறாமல் வந்து பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று பல்வேறு துன்பங்களுக்கும் ஆளான இருவரும் ஒரு நிலையில் இறைவழிபாட்டை மேற்கொண்டு, அதில் ஈடுபாட்டை அதிகரித்துக் கொண்டனர். முருகன் தினமும் தனது அறையிலேயே தியனம் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

SCROLL FOR NEXT