முகப்பு
தமிழ்நாடு

மீனவர்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்துவது மோடி அரசு: அமித்ஷா பேச்சு

தமிழக மீனவர்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்துவது மோடி தலைமையிலான அரசுதான் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

புதுச்சேரி : தமிழக மீனவர்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்துவது மோடி தலைமையிலான அரசுதான் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டபபேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் சனிக்கிழமை லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.

அப்போது, புதுச்சேரி மாநிலம் மிகச்சிறிய பகுதி. பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக உள்ள இங்கு, சிறப்பான ஆட்சி புரிந்தால் வளர்ச்சி பெற பல்வ்று வாய்ப்புகள் உள்ளன.

இங்கு இதுவரை ஆட்சி புரிந்த கட்சிகள் எதுவும் மாநில வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. பாஜகவால் மட்டுமே புதுவையில் நேர்மையான நிலையான ஆட்சியை தர முடியும்.

இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 550 தமிழக, காரைக்கால் மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மோடி பொறுப்பேற்ற பின் ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை. மோடி அரசின் முயற்சியால்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் மீட்கப்பட்டனர். தமிழக, புதுவை மீனவர்கள் நலனில் உண்மையான அக்கறை செலுத்துவது மோடி அரசுதான் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.