தமிழ்நாடு

ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் அட்டை கட்டாயமாகிறது: ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்

தினமணி

தமிழகத்தில் ரேஷன் கடையில் ஆதார் அட்டை இருந்தால்தான் பொருட்கள் வழங்கப்படும். இதற்கான உத்தரவு ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது.  தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சிவில் சப்ளை துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரவில், ‘ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் தவறாது ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆதார் அட்டை பெறமால் உள்ளவர்களுக்கான மாற்று வழி எதுவும் அந்த உத்தரவில் கூறப்படவில்லை.

அரசின் புதிய உத்தரவால் ஆதார் அட்டை இல்லாத குடும்ப அட்டைத்தாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT