முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவர், அதன் வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் உள்ளார். லண்டர் மருத்துவர் ரிச்சர்ட் பீல் உள்பட அனைத்து மருத்துவர்களும் அவருக்கு சிறந்த சிகிச்சையை அளித்து வருகின்றனர்.
இதனால், முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா பேசி வருகிறார். அவருக்கு ஃபிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அரசியலிலும், ஆட்சியிலும் முழுமையாக இருந்து பணிகளை அவர் மேற்கொள்வார் என்றார் அவர்.
நடிகை நமீதா வருகை: நடிகை நமீதாவும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "முதல்வர் ஜெயலலிதா ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டும் வருவார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது; அவர் வலிமையோடு வந்து மக்களுக்கு நல்லதைச் செய்வார்' என்றார் அவர்.
பிரார்த்தனைகள், வழிபாடுகள்: முதல்வர் ஜெயலலிதா பூரண உடல்நலம் பெற வேண்டி, அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே பல்வேறு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. செவ்வாய்க்கிழமையன்று, வேளாங்கண்ணி மாதாவின் படத்தின் முன் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் இசைக்கப்பட்டன.
மேலும், முதல்வரின் வயதான 68 வயதை நினைவுபடுத்தும் வகையில், 68 பூசணிக்காய்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பாக உடைக்கப்பட்டன. இதேபோன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
பெரும் மகிழ்ச்சி
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்த கபடி வீரர் சேரலாதன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா செய்த உதவியால் பல்வேறு விளையாட்டு வீரர்களின் நிலை மேம்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொடர்ந்திட அவர் விரைவில் குணமடைய வேண்டும். அவர் குணமடைந்து வந்த பிறகு மீண்டும் ஒருமுறை அவரை சந்திக்க விருப்புகிறேன். கபடி உலககோப்பையை வென்ற மகிழ்ச்சியைவிட, முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகச் சொன்னதுதான் எனக்கு பெரிய மகிழ்ச்சி என்றார் அவர்.
முதல்வர் நலன்: கபடி வீரர் சேரலாதன் விசாரிப்பு
உலககோப்பையில் விளையாடி கோப்பையை வென்ற மகிழ்ச்சியைவிட, முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகச் சொன்னதுதான் எனக்கு பெரிய மகிழ்ச்சி என்று இந்திய கபடி வீரர் சேரலாதன் கூறினார்.
கபடி வீரர் சேரலாதன் அப்பல்லோ மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். அங்கு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா செய்த உதவியால் பல்வேறு விளையாட்டு வீரர்களின் நிலை மேம்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொடர்ந்திட முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும். அவர் குணமடைந்து வந்த பிறகு மீண்டும் ஒரு முறை அவரை வந்து சந்திக்க விருப்புகிறேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.