தமிழ்நாடு

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன், குருவாயூரப்பன் கோயிலில் சபரிமலை புதிய மேல் சாந்தி தரிசனம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தரிசனம் செய்தார்.

ஏ.எஸ்.கணேஷ்


சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தரிசனம் செய்தார்.

கோயிலுக்கு வியாழக்கிழமை வந்த சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணனை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்ப பக்த சபாவின் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, செயலர் சசிகுமார் உள்ளிட்ட  நிர்வாகிகள் வரவேற்றனர்.

திருவிதாங்கூர் தேவஸம் போர்டு சார்பில் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில், மாளிகாபுரத்தம்மன் கோயிலுக்கும் இந்த ஆண்டு (2017) கார்த்திகை 1 முதல் ஓராண்டுக்கு புதிய மேல் சாந்தி பதவிக்காக 15-க்கும் மேற்பட்டோர் பெயரை பரிந்துரைத்தது.

அக்டோபர் மாதம் 17-ந்தேதி பாரம்பரிய முறைப்படி அப் பெயர்களை எழுதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு குழந்தைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்ததில் சபரிமலை புதிய மேல் சாந்தியாக கேரள மாநில பாலக்காடு செர்பலசேரியை சேர்ந்த தெக்கும்புரத்து மனையைச் சேர்ந்த டி.எம்.உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாளிகாபுரத்தம்மன் மேல் சாந்தியாக கேரள மாநில செங்கனாச்சேரியைச் சேர்ந்த வாழப்பள்ளி புது மனையை சேர்ந்த மனு நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பதவியேற்பு:

தேர்ந்தெடுக்கப்பட்ட சபரிமலை புதிய மேல் சாந்தி டி.எம்.உன்னிகிருஷ்ணனும், மாளிகாபுரத்தம்மன் மேல் சாந்தி மனு நம்பூதிரியும் வரும் நவம்பர்  6-ஆம் தேதி (கார்த்திகை 1-ஆம் தேதி) வேதபாராயணங்கள் முழங்க பதவியேற்கின்றனர். இதையொட்டி பல்வேறு ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் மேல் சாந்தி பதவிகளை ஓராண்டுக்கு மேல் வகிக்க முடியாது. மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT