தமிழ்நாடு

முதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள்  வீடு திரும்வுவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார்.

DIN

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள்  வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முதல்வர் வீடு திரும்புவார். உடல்நிலை தொடர்பான முக்கிய காரணிகள் எல்லாம் சரியான அளவில் உள்ளன. தற்போதுஅவருக்கு பிசியோதெரபி பயிற்சிகள்  வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார். . 

மேலும் அவசர சிகிச்சைப்  பிரிவிலிருந்து தனியான அறை ஒன்றிற்கு முதல்வரை மாற்றுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது, 'அவசர சிகிச்சை உபகரணங்களை வைத்திருப்பது ஒன்றுதான் இரண்டுக்குமிடையேயான வித்தியாசம் என்று பொன்னையன் தெரிவித்தார். ஆனால் முதல்வரை தனியான அறை  ஒன்றிற்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள்  இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

முதல்வர் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்றும் எப்போது வீட்டுக்கு திரும்பலாம் என்பதை அவரே முடிவு செய்வார் என்று அப்பல்லோ மருத்துவமனையின்  இயக்குனர் பிரதாப் ரெட்டி கூறியது பற்றிய கேள்விக்கு, 'முதல்வர் முழுமையாக குணம் அடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் எனபதுதான் அனைவரின் விருப்பமாகும்' என்று பொன்னையன் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT