பண்ருட்டி அருகே பூமியில் இருந்து சிவலிங்கம் சுவாமி சிலை கண்டெடுப்பு
பண்ருட்டி திருவதிகையைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுருநாதன். இவர் தனது நிலத்தில் இன்று ஏர் ஓட்டும் போது கல் ஒன்று தட்டுப்பட்டது.
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகையைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுருநாதன். இவர் தனது நிலத்தில் இன்று ஏர் ஓட்டும் போது கல் ஒன்று தட்டுப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வட்டாட்சியர் விஜய் ஆனந்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு அவ்விடத்தை தோண்டிய போது சுமார் ஐந்தரை அடி உயரம், ஒன்றரை அடி உயரம் அகலம் கொண்ட சிவலிங்கமும், இரண்டரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.