பண்ருட்டி இந்தியன் வங்கிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வரவில்லை: பொதுமக்கள் அவதி
பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் வராததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பண்ருட்டி: பண்ருட்டியில் உள்ள இந்தியன் வங்கிக்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் வராததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வங்கியில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து பணத்தை டெபாசிட் செய்ய மட்டுமே வழி சொல்கிறார்கள்.
வங்கிக்கு இன்னமும் புதிய ரூபாய் நோட்டுக்கள் வராததால், பொதுமக்கள் பணத்தை டெபாசிட் செய்ய சொல்வதால், அத்தியாவசிய செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்.
இதற்கிடையே நகைக் கடை மற்றும் துணிக் கடையில் பொதுமக்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு வீட்டு விசேஷங்கள் தடைபடக் கூடாது எனப்தால் பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்வதாக கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், வங்கிக் கணக்கு இல்லாத காய்கறி மற்றும் இதர வணிகக் கடைக்காரர்கள் பழைய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளாததால் வியாபாரம் மந்தம் அடைந்துள்ளது.
ஏடிஎம் முடங்கியதால் கடலூரில் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கியது.
பண்ருட்டி வெளிநாடுகளில் முந்திரி பயிர் ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணி ஈட்டும் மையமாக விளங்குவதால் இங்கு பெரிய அளவில் வணிக இழப்பு ஏற்பட்டுள்ளது.