தமிழ்நாடு

ஒரு வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவரும்: அமைச்சர் தகவல்

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிப்பது மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையில் தேர்வு என்பது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்ட அரசாணை குறித்த வழக்கை விசாரித்த உச்ச்சநீதிமன்றம் அரசாணை செல்லும் என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாராக இருக்கிறது. முதலமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். கல்வித் தரத்தைப்பொறுத்த அளவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வித்திட்டம் நன்றாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

ஹாட்ரிக் தங்கப் பந்து விருது வென்ற பொன்மட்டி..! முதல் வீராங்கனையாக சாதனை!

காஸா மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் உள்ளது: ஆஸி. கேப்டன்

தில்லி பள்ளி வளாகத்தில் 10 வயது மாணவி மர்ம மரணம்! 18 நாளாகியும் எப்ஐஆர்கூட இல்லை; தாய் கதறல்!

SCROLL FOR NEXT