தமிழ்நாடு

பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்ததால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கலக்கம்

பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் வரும் காலத்தை சமாளிப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மொஹம்மது


திருவள்ளூர்: பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் வரும் காலத்தை சமாளிப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிரம்பிய பூண்டி ஏரி இந்த ஆண்டும் பருவமழையால் மட்டுமே நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 8 டி.எம்.சி., தண்ணீரை இதுவரை ஆந்திர அரசு திறந்து விடவில்லை. இதனால் பூண்டி ஏரி முற்றிலுமாக வறண்டு போகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆந்திர மாநில அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது பூண்டி ஏரியில் 500 கன அடி நீர் மட்டுமே இருப்புள்ளது. அதுவும் தினமும் குடிநீரேற்று நிலையத்துக்கு வினாடிக்கு 50 கன அடி நீர் வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, ஆந்திர மாநிலத்தில் இருந்து வரவேண்டிய தண்ணீர் அல்லது வடகிழக்கு பருவழை என இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே முடியும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT