ஜெயலலிதா நலம் பெற தென்கலை வரதராஜ பெருமாள் கோயிலில் அதிமுக சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள தென்கலை வரதராஜபெருமாள் கோயிலில் அதிமுக சார்பில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுச்சேரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள தென்கலை வரதராஜபெருமாள் கோயிலில் அதிமுக சார்பில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம் பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி அதிமுகவினர் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியிலும் மணக்குள விநாயகர், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தலைமையில் ஸ்ரீ தென்கலை வரதராஜபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடைபெற்றது.
மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ. அன்பழகன், ஆ.பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓம் சக்தி சேகர், ராஜாராமன், இணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் பாண்டுரங்கன், நாகமணி, கோவிந்தம்மாள், பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர், அணி நிர்வாகிகள் பாப்புசாமி, லக்கி பெருமாள், விஜயலட்சுமி, கலைச்செல்வி, மூர்த்தி, சுப்பிரமணி, ஆனந்தன், மகேஸ்வரி, தமிழ்மாறன் உள்பட பலர் பங்கேற்றனர். முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக செயலாளர் செந்தில்முருகன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.