தமிழ்நாடு

பூரண குணமடைந்து ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: முன்னாள் ஆளுநர் ரோசய்யா

பூரண குணமடைந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

DIN

சென்னை: பூரண குணமடைந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிரைவில் வீடு திரும்புவார் என தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என  அதிமுகவினர் பல்வேறு வித பிரார்த்தனைகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பக்கத்து மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று மாலை சென்னை வந்தார். நேராக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற அவர், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வரும்  மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த செய்தியாளர்களை ரோசய்யா சந்தித்தார். அப்பொழுது அவர், 'முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் அடைய இறைவனை பிரார்த்திகிறேன் அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்' என்று தெரிவித்தார். எனவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT