முகப்பு
தமிழ்நாடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 2-வது நாளாக திருவாரூரில் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.  

Updated On : 18 அக்டோபர், 2016 at 12:27 PM
பகிர்:


திருவாரூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை 2-வது நாளாக தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Advertisement

மேலும் போராட்டம் குறித்து முத்தரசன், ஜவஹிருல்லா ஆகியோர் கூறியது: ரயில் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் 2-வது நாளாக நடந்து வருகிறது. போராட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கத் தொழிலாளர்கள், மாதர்சங்கத்தினர் மற்றும் அனைத்துத் தரப்பு பொது மக்களும் பங்கேற்றுள்ளனர். தமிழக மக்களின் இக்கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடையும் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.